- வெங்காயம் - 1
- தக்காளி - 3
- பச்சை மிளகாய் - 2
- பூண்டு - 10 பல்
- வேக வைத்த துவரம் பருப்பு - 2 tbsp
- மிளகு, சீரகம், மல்லி விதை - தலா 1 tsp
- மஞ்சள் தூள் - 1/4 tsp
- பட்டை, சோம்பு, கிராம்பு, கருவேப்பில்லை, எண்ணெய் - தாளிக்க
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி தழை - அலங்கரிக்க
- வெங்காயம், பச்சை மிளகாயை நீளமாகவும், தக்காளியை பொடியாவும் நறுக்கி வைக்கவும்.
- வேகவைத்த பருப்பில் 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கரைத்து வைக்கவும்.
- வெறும் வாணலியில் மிளகு சீரகம் மல்லி வறுத்து ஒரு சின்ன மெல்லிய துணியில் கட்டி தனியே வைக்கவும்.
- எண்ணெய் சூடாக்கி தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- பச்சை மளகாய் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கி தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.
- உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கரைத்து வைத்துள்ள பருப்பு தண்ணீரை சேர்க்கவும்.
- இப்பொழுது கட்டி வைத்துள்ள மல்லி சீரகம் மிளகாய் சேர்த்து கொதிக்க விடவும்.
- நுரை கட்டி வரும் போது அனைத்து கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
0 comments:
Post a Comment